விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பொன்முடியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொன்முடியின் ஆபாச பேச்சு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை எச்சரித்துள்ளது. இந்து சமயங்களை விலைமாதுவுடன் ஒப்பிட்டு ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவில்லை என்றால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.