Thursday, July 31, 2025

சென்னை மின்சாரப் பேருந்துகள் : இதுல இவ்வளவு வசதிகள் இருக்கா..!!

தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?

மின்சார பேருந்தின் படிக்கட்டு உயரம் தரையில் இருந்து 400 மில்லி மீட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பேருந்துகளில் எளிதாக ஏறி, இறங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பேருந்துகளில் இருக்கைகளின் பக்கவாட்டு இடைவெளி 650 மி.மீ.-க்கு பதிலாக 700 மி.மீ. அகலம் உள்ளதால், நின்று செல்லும் பயணிகளுக்கு எளிதாக இருக்கும்.

மின்சாரப் பேருந்துகளில், இரண்டு கேமராக்கள் முன் பகுதியிலும், ஒரு கேமரா பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளதால் மகளிருக்கு பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படுகிறது.

மழைக்காலத்தில் பேருந்துக்குள் தண்ணீர் செல்லாத வகையில் சிறப்பு வசதி. பெரிய எல்.இ.டி திரைகள், தமிழ், ஆங்கிலத்தில் வழித்தட அறிவிப்பு. பேருந்தின் ஒவ்வொரு இருக்கைக்கு அடியில் மொபைல் சார்ஜ் செய்யும் வசதி. ஒவ்வொரு இருக்கைக்கும் சீட்டு பெல்ட் உள்ளிட்ட வசதிகள் இந்த பேருந்தில் உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News