ஐ.பி.எல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் 18வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த இலவச பயணம், போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்குள் மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.