தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ந்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால்
அனைத்து அணைகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்குகிறது.
அதாவது, ஏரியின் மொத்த நீர்மட்டமான 24 அடியில் 22 அடி நிரம்பியது. ஏரியில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் நொடிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், உபரி நீர் திறப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னையில் வரும் நாட்களில் மழையின் தாக்கம் அதிகரிக்கலாம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
