ரூ.50 லட்சம் சம்பளம்.. ChatGPT உதவியுடன் பட்டதாரிக்கு ஜாக்பாட்!

டெல்லி நிறுவனத்தில் கணினி அறிவியல் பட்டதாரி ஒருவர், ஒன்பது மாத காலம் நிறுவனங்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ChatGPT உதவியுடன் ரூ. 50 லட்சம் ஆண்டு சம்பளத்தில் வேலை பெற்ற தனது கதையை ‘Developers India’ என்ற Reddit சமூகத்தில் பகிர்ந்துள்ளார்.

பல மாத முயற்சிகளுக்குப் பிறகு, ChatGPTஉதவியுடன் தனது விண்ணப்பத்தை (Resume) ஒவ்வொரு வேலைக்கும் ஏற்ப மாற்றி எழுதத் தொடங்கினார். இந்த மாற்றங்களுக்குப் பிறகு, நேர்காணல் அழைப்புகள் வரத் தொடங்கின.

தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு, ரூ. 50 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. இது பல மாத போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்த ஒரு சரியான தீபாவளிப் பரிசாக அமைந்தது. உண்மையான வெற்றிக்கு விடாமுயற்சியும், சமநிலையும் அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

எங்கு விண்ணப்பித்தீர்கள் என்று கேட்டபோது, அனைத்து விண்ணப்பங்களும் LinkedIn வழியாகச் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

Related News

Latest News