சமூக வலைதளங்களில் ஜிப்லி போட்டோக்கள் ட்ரெண்டாகி வரும் நிலையில் இன்ஸ்டாகிராம், டிக்டாக் உள்ளிட்டவைகளை பின்னுக்கு தள்ளி சாட் ஜிபிடி செயலி சாதனை படைத்து வருகிறது.
இந்த ஜிப்லி புகைப்படங்களை சாட் ஜிபிடி செயலி மூலமாக உருவாக்குகிறார்கள். அந்த வகையில் சாட் ஜிபிடி ஆப் அதிக எண்ணிக்கையில் டவுன்லோட் செய்யப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 46 மில்லியனுக்கும் அதிகமான டவுன்லோடுகளை ஜிபிடி நிறைவு செய்திருக்கிறது. இது டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் எண்ணிக்கையை விட அதிகமாகும்.