தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐபிஎஸ், ஐஏஎஸ் உள்பட தமிழக அரசின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக தலைமை செயலாளர் முருகானந்தத்தை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் ஐஏஎஸ் நியமினம் செய்யப்பட்டுள்ளார்
அதேபோல், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக செயல்பட்டு வரும் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
