தமிழகத்தின் இந்த 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி, தேனி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News