Thursday, June 5, 2025

மத்திய அரசு கொடுக்கும் ரூ.3 லட்சம்.., விவசாயிகளுக்கு இன்ப செய்தி!

இந்தியாவில் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கான ஒரு முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகள் குறைந்த வட்டியில் கடன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள கிசான் கிரெடிட் கார்ட் திட்டமான MISS – இந்த 2025-26 நிதியாண்டிலும் தொடரும் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஒரு நேரடி நிவாரணமாக அமையும்.

இந்த திட்டத்தின் மூலம், விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன்களை 7 சதவீத மலிவு வட்டியில் பெற முடிகிறது. இதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மத்திய அரசு 1.5 சதவீத வட்டித் தள்ளுபடியையும் வழங்குகிறது. மேலும், கடனை நேரத்துக்கு திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால், அவர்களுக்கு கடனுக்கான பயனுள்ள வட்டி வெறும் 4 சதவீதமாக மட்டுப்படும். இது நேர்மையான கடன் செலுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கிறது.

விவசாயிகள் கால்நடை வளர்ப்பு அல்லது மீன் வளர்ப்புக்காக மட்டும் கடன் பெற்றால், ரூ.2 லட்சம் வரை மட்டுமே இந்த வட்டிச் சலுகை கிடைக்கும். தற்போதைய நிலவரப்படி, நாட்டில் 7.75 கோடிக்கும் அதிகமான கிசான் கிரெடிட் கார்டு கணக்குகள் உள்ளன. 2014ல் ரூ.4.26 லட்சம் கோடி அளவிலான கடன் வழங்கப்பட்ட நிலையில், 2024 டிசம்பர் மாதத்துக்குள் இது ரூ.10.05 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது, கிராமப்புறக் கடன் அமைப்புகளை வலுப்படுத்துவதோடு, சிறு விவசாயிகளின் நலனுக்கும் மிகப் பெரிய ஆதரவாக உள்ளது.

பிரதமர் கிசான் திட்டத்தில் என்ன செய்வதனால் பயனடையலாம்?

அதற்கான செயல்முறை எளிமையானது தான். PM-KISAN திட்டத்திற்காக விவசாயிகள் இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். முதலில் www.pmkisan.gov.in என்ற இணையதளத்தில் சென்று, “New Farmer Registration” என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Aadhaar எண்ணும், வங்கி கணக்கு விவரங்களும், நில உரிமை சான்றுகளும் வழங்க வேண்டும். சரியான தகவல்களுடன் பதிவு செய்தால், சரிபார்ப்பு முடிந்த பிறகு சரியான நேரத்தில் பணம் நேரடியாக விவசாயியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news