ரூ.1.60 லட்சம் வரை சம்பளம்., மத்திய அரசு மின்சாரத்துறையில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் மின்வினியோக நிறுவனம் பவர்கிரிட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் 7 காலிப்பணியிடங்கள் சட்ட பயிற்சி அதிகாரி (Officer Trainee – Law) பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் தேவையில்லை. தேர்ச்சி பெற்றவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம்

  • பயிற்சி அதிகாரி (சட்டம்) – 7 பணியிடங்கள்
  • பொதுப்பிரிவு – 4, ஓபிசி – 1, எஸ்சி – 1, எஸ்டி – 1, மாற்றுத்திறனாளிகள் – 1

வயது வரம்பு

வயது 28 வரையிலானவர்கள் (05.12.2025 தேதிக்குள்). மத்திய அரசின் விதிமுறையின் படி தளர்வு உண்டு.

கல்வித் தகுதி

  • 3 ஆண்டு எல்.எல்.பி அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு
  • குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள்

சம்பளம்

  • பயிற்சி காலத்தில் அடிப்படை ரூ.40,000 + 12% கொடுப்பனவு மற்றும் சாதாரணச் செலவுகள்
  • பயிற்சி முடிந்தபின்பு ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரையிலான சம்பளம்
  • பயிற்சி காலத்தில் வருட வருமானம் ரூ.11 லட்சம், பயிற்சி முடிந்த பின்னர் ரூ.22.5 லட்சம்

தேர்வு முறை

  • முதுகலை சட்டப்படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வு (CLAT – 2026) ஆன்லைனில் கட்டாயம் எழுத வேண்டும்
  • பொதுப்பிரிவு 40%, பிற பிரிவுகள் 30% மதிப்பெண் கடைசி தகுதியாகும்
  • தேர்வு மதிப்பெண்களில் CLAT 85%, குழுக் கலந்துரையாடல் 3%, நேர்காணல் 12%
  • மருத்துவ பரிசோதனையும் பூர்த்தி செய்ய வேண்டும்

விண்ணப்பிக்கும் முறைகள்

பவர்கிரிட் கார்ப்ரேஷன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் CLAT தேர்வு விண்ணப்ப பதிவு எண் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

  • கிளாட் விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 31.10.2025
  • பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 05.12.2025

Related News

Latest News