2 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட BHIM-UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க, மத்திய அமைச்சரவை ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டம் சிறு வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் ஒன்று முதல் 2025 மார்ச் 31 வரையிலான தனிநபர் மூலம் வணிகர்களுக்கு, BHIM-UPI ஆப் மூலம் செலுத்தப்பட்ட, 2 ஆயிரம் ரூபாய்க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்காக ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரை ஒப்புதல் அளித்துள்ளது.