Monday, March 31, 2025

ஆன்லைன் விளம்பரங்களுக்கான சேவை வரியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

மத்திய அரசு ஆன்லைன் விளம்பர சேவைகளுக்கான டிஜிட்டல் சேவை வரியை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஜூன் 1 முதல், வெளிநாட்டு இணையதளங்கள் இந்தியாவில் வழங்கும் ஆன்லைன் விளம்பர சேவைகளுக்கு 6 சதவிகித டிஜிட்டல் சேவை வரி விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதாவில், இந்த வரியை ரத்து செய்யும் முன்மொழிவை அறிமுகப்படுத்தினார்.

Latest news