இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 விளையாட்டு இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சட்டவிரோதமாக இயங்கி வரும் 357 வெளிநாட்டு ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களுடன் இணைக்கப்பட்ட 2 ஆயிரத்து 400 வங்கி கணக்குகளையும் அரசு முடக்கியுள்ளது. இதன் மூலம126 கோடி முடக்கப்பட்டுள்ளது.