RSS அமைப்பு தொடங்கி 100 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்த நூற்றாண்டு கொண்டாத்திற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை RSS ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லியில் RSS அமைப்பு தொடங்கியதன் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சிறப்பு ரூ. 100 நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்த விழாவில் பேசிய மோடி, “ஆங்கிலேய ஆட்சியில் நடந்த கொடுமைகளை எதிர்த்து RSS அமைப்பினர் கடுமையாக போராடினர். சுதந்திரப் போராட்டத்தின் போது RSS நிறுவனர் கே.பி. ஹெட்கேவர் உட்பட RSS உறுப்பினர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும் பேசியவர் “பொய்க்கு எதிரான உண்மை, அநீதிக்கு எதிரான நீதி, இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி நாள். நாளை விஜயதசமி பண்டிகை; தீமைக்கு எதிராக நன்மை வெற்றி பெற்ற நாள். 100 ஆண்டுகளுக்கு முன் RSS அமைப்பு உருவானது தற்செயல் நிகழ்வு அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி இது. நானும் RSS அமைப்பை வேராக கொண்டவன் தான். RSS என்பது தீமையை எதிர்த்து உண்மையை நிலைநாட்டிய இயக்கம். RSS நாட்டுக்கு பல சேவைகளை செய்துள்ளது” என்று குறிப்பிட்டார்.