நடிகர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக இதுவரை தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ஜனநாயகன் படத்திற்கு U/A சென்சார் சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவை நீதிமன்றம் தடை செய்தது. ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க வேண்டும் என்ற தனிநீதிபதி உத்தரவிற்கு உயர்நீதிமன்ற அமர்வு இடைக்கால தடையை எதிர்த்து KVN தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், ஜனநாயகன் பட விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
