விருதுநகர் மாவட்டம் சிவகாசி செந்தில் ஆண்டவர் காலனியில் 70 வயதான மூதாட்டி மகேஸ்வரி வசித்து வருகிறார். தினசரி அதிகாலை வழக்கம் போல வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் வீட்டு வாசலை தண்ணீர் தெளித்து விட்டு உள்ளே சென்றபோது வீட்டிற்கு உள்ளே முகமூடி அணிந்த மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி மகேஸ்வரியிடம் நகை பறிப்பில் ஈடுபட முயன்றார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட மூதாட்டி மகேஸ்வரி கூச்சலிடவே உடனடியாக அந்த மர்மநபர் பதறி அடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
முகமூடி அணிந்து தப்பியோடிய நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
