டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. இந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கார் வெடிப்பில் சம்மந்தப்பட்ட காரின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கார் சென்ற இடங்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். இதன்படி கார் சென்ற பார்க்கிங், டோல்கள் உள்டப 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே டெல்லியில் வெடித்த காரை ஓட்டி வந்தவரின் அடையாளம் தெரிந்தது. கார் வெடிப்பிற்கு அரை மணி நேரம் முன்னதாக சுங்கச்சாவடியை கார் கடந்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
காரை ஓட்டியவர் ஒல்டு டெல்லி ரயில் நிலையத்தில் உறவினரை இறக்கிவிட்டு விட்டு திரும்பியுள்ளார். டெல்லிக்குள் பதர்பூர் எல்லை வழியாக டெல்லியில் நுழைந்துள்ளது என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
