பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கொரோனா பரவல் அதிகரிப்பால் புதுச்சேரியில் 10,11,12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை - அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.
முதலமைச்சருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு கொரோனா தொற்று உறுதி. லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக ட்விட்டரில் பதிவு.
“பட்டினி சாவுகள் – அறிக்கை தருக”
மாநிலங்களில் ஏற்படும் பட்டினி சாவுகள் தொடர்பாக மாநில அரசுகள் அளிக்கும் தரவுகளை சேகரித்து, அறிக்கையாக வழங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.
இந்தியாவில் ஓமிக்ரான் முதல் உயிரிழப்பு
https://youtu.be/pf8qVDteMGg
வங்கிக் கணக்கில் ரூ.2000
புத்தாண்டு நாளில் விவசாயிகளுக்கு ரூ.2000. 11 கோடி 60 லட்சம் ரூபாய் விவசாயிகளின் வாங்கிக் கணக்கில் செலுத்தப்படும் - பிரதமர் மோடி
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு 653 ஆக உயர்வு
இந்தியாவில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்துள்ளது: மத்திய அரசு.
ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்களில் 186 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 467 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்-167, டெல்லி-165, கேரளாவில்-57 பேருக்கு ஓமிக்ரான்...
இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்
உத்தரப்பிரதேசத்தில் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல் என அரசு அறிவிப்பு.
இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு; திருமண விழாவில் 200...
பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு - 3 பேர் உயிரிழப்பு.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சுமார் 20 பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட அனுமதி
புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதியளிக்கப்படுகிறது - முதலமைச்சர் ரங்கசாமி.
வருண்சிங் உடலுக்கு விமானப்படையினர் அஞ்சலி
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கேபட்ன் வருண்சிங் உடலுக்கு பெங்களூருவில் விமானப்படையினர் அஞ்சலி.