144 உத்தரவு அமல்
மும்பையில் இன்று முதல் ஜூலை 10ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை அறிவிப்பு.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசை கவிழ்க்க முயற்சி நடப்பதால் தொண்டர்களின் கொந்தளிப்பை...
துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்
மகாராஷ்டிரா: சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் முகாமிட்டுள்ள 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க துணை சபாநாயகர் அதிரடி நோட்டீஸ்.
ராகுல் காந்தியின் அலுவலகம் சூறையாடல்
கேரளா: வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகத்தில், சிலர் மேஜை மற்றும் நாற்காலிகளை உடைத்து தாக்குதல் நடத்தியதால் பதற்றம்.
தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், சம்பந்தப்பட்டவர்கள்...
எதிர்ப்பையும் மீறி அக்னி பாத் திட்டம் தொடக்கம்
நாடு முழுவதும் பல இடங்களில் இளைஞர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையிலும் அக்னிபாத்| திட்டத்திற்கான ஆட்சேர்ப்பு பணி தொடக்கம்.
முதற்கட்டமாக 45,000 முதல் 50,000 வரையிலான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.
திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல்
பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார்.
பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்றனர்.
குடியரசுத்தலைவர் வேட்பாளருக்கு Z பிரிவு பாதுகாப்பு
எதிர்க்கட்சிகளின் பொது குடியரசுத்தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு அளித்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“இழப்பை சந்தித்துள்ளோம்” – எண்ணெய் நிறுவனங்கள்
கடும் விலையேற்றத்திற்கு பிறகும் ஏப்ரல் - ஜூன் வரையிலான நடப்பு காலாண்டில், பெட்ரோல், டீசல் விற்பனையில் லிட்டருக்கு 10 - 12 வரை இழப்பை சந்தித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல்.
பழங்குடியினர் நலனுக்காக திரெளபதி முர்மு என்ன செய்துள்ளார்? – யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா.
"திரௌபதி முர்மு பழங்குடியினத்தை சேர்ந்தவர். ஆனால், அவர்களுக்காக என்ன செய்துள்ளார்? ஆளுநராக இருந்துள்ளார், அவ்வளவுதான்.
நான் நிதியமைச்சராக இருந்தபோது தாக்கல் செய்த 5 பட்ஜெட்களை பாருங்கள், பழங்குடியின...
ஹீரோ நிறுவனத்தின் அதிரடி முடிவு
உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஜூலை 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்கள் விலையை 73,000 ரூபாய் வரை உயர்த்தவுள்ளதாக ஹீரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு
வரலாறு காணாத வகையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரிந்து, ஒரு டாலருக்கு 78.32 காசுகளாக குறைந்துள்ளது.