தங்கப் பொடி தூவிய பர்கர் சாப்பிட்டால் ரொக்கப் பரிசு தருவதாக வியாபாரி ஒருவர் அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம், லூதியானா தெருவில் உள்ள ஒரு வியாபாரிதான் இந்த அதிரடியான செயலை மேற்கொண்டுள்ளார். இவர் தனது உணவகத்தில் வெஜ் பர்கரில் தங்கத் துகள்களைத் தூவி விற்பனை செய்துவருகிறார்.
ஒரு பர்கரின் விலை 1000 ரூபாய்.
தங்கத் துகள் தூவப்பட்ட பர்கர் என்பதால் தங்கத்தின்மீது மோகம்கொண்டுள்ளவர்கள் அடிக்கடி இந்த உணவகத்துக்கு வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர்.
இந்த நிலையில், தனது உணவகத்தில் ஒரு பர்கரை 5 நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டால் ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகவும். அத்துடன் சாப்பிட்ட பர்கருக்கும் பணம் தரவேண்டியதில்லை எனவும் அறிவித்தார்.
அதேசமயம், 5 நிமிடத்தில் பர்கரை சாப்பிட முடியாவிட்டால் சாப்பிட்ட பர்கருக்கு மட்டும் பணம்கொடுத்தால் போதும்.
இதனால் வாடிக்கையாளர் கூட்டம் அவரது உணவகத்தில் அலைமோதியது. சிறிய உணவகத்தில் விலையுயர்ந்த உணவு விற்கப்படுவதுடன், அதனை சாப்பிடுவதற்கு பரிசும் தருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.