Tuesday, February 4, 2025

சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு..!!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. சீமானின் பேச்சை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.

அந்த வகையில், பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தி.க., தபெதிக, விசிகவினர் அளித்த புகார்களின் அடிப்படையில், கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல், கரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. சீமான் மீது 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Latest news