கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மா பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.