பாமக எம்எல்ஏ அருள் உள்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வடுகம்பட்டி பகுதியில் நேற்று ராமதாஸ் ஆதரவு பா.ம.க எம்.எல்.ஏ. அருள் பயணித்த காரை வழிமறித்து அன்புமணி ஆதரவாளர்கள் தாக்கியதால், இருதரப்பினர் இடையே கடும் மோதல் வெடித்தது. இருதரப்பும் கட்டை, கற்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். புகாரின்பேரில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் எம்எல்ஏ அருள் உள்பட அவரது ஆதரவாளர்கள் 50 பேர் மீது அடிதடி மற்றும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related News

Latest News