நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்து இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். பின்னர் இவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டது.
இதற்கிடையில் நடிகர் சிங்கமுத்து, Youtube தளத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நடிகர் வடிவேலு அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இனிமேல் வடிவேலு குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க கூடாது. வடிவேலு பற்றிப் ஏற்கனவே பேசியிருந்த வீடியோக்களை யூடியூப்பிலிருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகர் சிங்கமுத்துக்கு ரூ.2,500 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.