இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் அனுராக் காஷ்யப் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த டீசரில் சிறுவர், சிறுமிகள் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதனை இணையத்தில் இருந்து நீக்க உத்தரவிடக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மத்திய அரசு மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.