விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் (45). இவர் செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, செம்மேடு அருகே திடீரென்று இருசக்கர வாகனம் குறுக்கே வந்துள்ளது.
வாகனம் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் பாய்ந்து விழுந்தது. இதில் காரில் பயணத்தை இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
