Saturday, December 27, 2025

டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் பரிதாப பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள செம்பியமாதேவி தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி மீது பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த மற்றும் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

Latest News