சென்னை வடபழனியை சேர்ந்த சாம் என்பவர் தனது 14 வயது மகனிடம் கார் சாவியை கொடுத்து காருக்கு கவர்போட கூறியதாக தெரிகிறது. அப்போது, சிறுவன் இயக்கிய கார், கட்டுப்பாட்டை இழந்து அங்கு நின்றிருந்த இரண்டு பேர் மீது மோதி, பின்னர் அங்கிருந்த ஆட்டோ மற்றும் மரத்தின் மீது மோதி நின்றது.
இந்த விபத்தில் மகாலிங்கம் மற்றும் கங்காதரன் ஆகியோர் காயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய் பிரிவு போலீசார், 14 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை சாம் ஆகிய இரண்டு நபர்களின் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.