மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய கனிமவளத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விவசாயிகள் குழுவினர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர்.
இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.