‘டபுள் என்ஜின் என்கிற டப்பா என்ஜின் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா?’ : மு.க ஸ்டாலின் கேள்வி

சென்னை நுங்கம்பாக்கத்தில் தி வீக் (THE WEEK) ஆங்கில வார இதழ் நடத்தும் கருத்தரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டுக்கான எனது கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு அல்ல. எனது கனவு என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியதுதான்.

கடந்த 5 ஆண்டுகளில் எல்லோருக்குமான வளர்ச்சியை சாதித்து காட்டி உள்ளோம்.

தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கி உள்ளோம்.

தி.மு.க. ஆட்சியின் முத்திரை திட்டங்கள் அனைத்தும் மகளிருக்காகவே நடத்தப்படுகிறது.

தமிழகம் அனைத்து துறைகளிலும் ஆல் ரவுண்டராக வளர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது.

தமிழகத்தின் திட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை வரை பாராட்டி உள்ளது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு ஆதரவான நிலை உள்ளது.

தமிழகம் நம்பர் ஒன் மாநிலம் என மத்திய பா.ஜ.க. அரசே கூறி உள்ளது.

டபுள் என்ஜின் என கூறும் டப்பா என்ஜின் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா?

மத்திய பா.ஜ.க. அரசின் நெருக்கடியை தாண்டி வளர்ந்துள்ளது தமிழ்நாடு.

எல்லோருக்குமான வளர்ச்சியை நோக்கமாக கொண்டு திட்டங்களை தீட்டி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News