தொற்று நோயைத் தடுக்குமா பட்டுச் சேலைகள்?

269
Advertisement

ஆணோ பெண்ணோ பட்டாடை என்றதுமே சட்டென மகிழ்ச்சி
தாண்டவமாடும். ஆனால், விலை அதிகம் என்பதால் எப்போதுமே
பட்டாடை உடுத்துவதில்லை.

எனினும், திருமணம் என்றதுமே அனைவருக்குமே நினைவில்
வருவது பட்டாடைதான். மணமகள் வீட்டாரும் மணமகன்
வீட்டாரும் பட்டாடை உடுத்தி திருவிழாக்கோலம் கொண்டிருப்பர்.
மணப்பெண் மட்டுமன்றி, திருமணத்துக்கு மணமக்களை வாழ்த்த
வரும் பெண்களும் பட்டுச் சேலை உடுத்திக்கொண்டு வருவதை
நாம் பார்த்திருக்கிறோம். ஆண்களும் பட்டு வேட்டி, பட்டுச் சட்டை
அணிந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

அதிலும், பெண்களுக்குக் கொள்ளைப் பிரியம் பட்டுச் சேலைமீதுதான்.
பட்டுச் சேலை வாங்கிக்கொடுக்காவிட்டால், அவர்கள் கண்களைக்
கசக்கத் தொடங்கினால், பொலபொலவென வரும் கண்ணீர் காவேரி
ஆற்றில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்போலக் கணவரை
மட்டுமன்றி, ஒட்டுமொத்த குடும்பத்தையே அசைத்துவிடும்.

அதனால் பட்டுச் சேலை இல்லாத திருமணத்தை இந்தியாவில்
காண்பதே அரிது. திருமணத்தின்போது மட்டுமன்றி, திருவிழாக்கள்,
விஷேச நிகழ்ச்சிகள் போன்ற வைபவங்களின்போது பெண்கள்
அனைவரும் கண்டிப்பாகப் பட்டுச் சேலைகள் உடுத்தியிருப்பர்.

பட்டுச் சேலை, பட்டாடைகளின் விலையைப் பற்றி கவலைகொண்டுதான்
அவற்றைப் பற்றி மலைத்துப்போகிறோமே தவிர, பட்டாடைகள் அணிவதால்
கிடைக்கும் நற்பலன்களை அறிந்துகொண்டிருக்கவில்லை.

ஏன் பட்டாடை அணிகிறோம் தெரியுமா……?

 1. பட்டுத் துணிகளுக்கும் பட்டுக்கும் இயற்கையாகவே ஒரு குணமுண்டு.
  அதன்படி, பட்டுக்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களைத் தக்க
  வைத்துக்கொள்ளும் சக்தியும், தீய கதிர்வீச்சுகளை (நோயாளிகளின்
  சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்தக் கதிர்கள்) போன்ற
  வற்றைத் தடுத்து உடலுக்கு வலிமை அளிக்கும்.
 2. திருமண வீட்டுக்குப் பலதரப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர்.
  அவர்களின் உடல் ஆரோக்கியம் எப்படி உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
  திருமணத்துக்கு வருகை தந்திருப்பவர்கள்மூலம் மணமகனுக்கும் மணமகளுக்கும்
  தொற்று நோய் பரவி விடக்கூடாது என்பதற்காகவே பட்டுச் சேலை உடுத்துகின்றனர்.
  இதைத் தற்போது சில நாடுகளும் ஆராய்ச்சி செய்துவருவதாகக் கூறப்படுகிறது.

3.மேலும், மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் ஆபரணங்களும் உடலியல்
காரணங்களுக்காகவே. நரம்புகள், இதயம் போன்ற உடலுறுப்புகளின்மீது
தங்கம் படும்போது ரத்த ஓட்டம் சீரடையும். தங்கத் தாலி அணிவதும் இதற்காகத்தான்.

ஆண்களே உஷார். கணவன்மார்களுக்கு இந்த விஷயம் நன்கு தெரியும்.
கல்யாணம் ஆகாத காளைகளே……கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படும்போது…
பட்டுச்சேலை விஷயத்தையும் நினைவில் வைச்சுக்கங்க….