Saturday, August 16, 2025
HTML tutorial

எச்சரிக்கை!!அரிசியால் புற்றுநோய் உண்டாகுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

என்னதான் வித விதவிதமான உணவுகள் வந்தாலும் பெரும்பாலானோர் சாதம் சாப்பிடுவதை விரும்பவர்கள்.. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தியா, சீனா, வங்கதேசம், நேபாளம், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் அரசியை மையமாக கொண்ட உணவுகளை உட்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அரிசியின் மூலம் புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்புள்ளதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வயலில் 10 ஆண்டுகளில் 28 அரிசி வகைகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் கார்பன் டை ஆக்சைட்டின் விளைவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
இதில், காலநிலை மாற்றம் காரணமாக, 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரிப்பதும், கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதும், மண் வேதியியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், நெற்பயிரால் ஆர்சனிக் என்னும் அமிலம் அதிகளவு உறிஞ்சப்படுவது தெரிய வந்துள்ளது.

நெல் சாகுபடியின் போது மாசுபட்ட மண் மற்றும் பாசன நீர் ஆகியவை அரிசியில் ஆர்சனிக் அளவை அதிகரிக்கப்படுகிறது அது மட்டுமின்றி, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீரிலிருந்து கூடுதல் ஆர்சனிக்கையும் அரிசி உறிஞ்சுகிறது என்கின்றனர்
ஆர்சனிக் அளவு அதிகரித்த அரசியை உண்பதன் காரணமாக, நுரையீரல், சிறுநீர்ப்பை மற்றும் தோல் புற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆகையால் 2050 ஆம் ஆண்டிற்குள் அரிசியை பிரதானமாக உணவு உண்ணும் நாடுகளில் வாழும் மக்கள் கோடிக்கணக்கானோருக்கு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News