Sunday, December 22, 2024

எனக்கு பூண்டு ரசம் கிடைக்குமா? தமிழில் சாப்பாடு ஆர்டர் செய்த தோனி!!!

கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவர் தல தோனி…இப்பொழுதெல்லாம் கிரிக்கெட் என்றால் தோனி மற்றும் அவருடைய ராசியான நம்பரான ஏழாம் நம்பர் தான் ஆங்காங்கே தென்படும் சமீபத்தில் நடந்த ipl-லில் சென்னை அணி அபார வெற்றியடைந்ததை அடுத்து தல தோனி குறித்து ஏராளமான பதிவுகள் உலா வருகின்றன அதில் ஒன்றை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

இந்திய அணி வீரர்கள் திருவனந்தபுரத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடிக் கொண்டிருந்த சமயம்.அவர்கள் தங்கியிருந்த  ஹோட்டலில் பணிபுரிந்த செஃப் ஒருவர் தோனி குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் அது என்னவென்பதை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.

இதுகுறித்து பேசிய அந்த செஃப் கூறியதாவது என்னவென்றால் இந்திய வீரர்கள் ஒரு நாள் பேருந்தில் இருந்து அனைவரும் இறங்கிய போது என் கண்கள் மட்டும் தோனியை தேடின. பின் வீரர்கள் அனைவரும் அறைக்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு இரவு உணவை 7 மணியளவில் ஆர்டர் செய்தனர். ஆனால் தோனி தனது இரவு உணவை 9. 30 மணிக்கு ஆர்டர் செய்தார் என கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர் அந்த சமயத்தில் லிஃப்டுக்குக் கூட காத்திருக்காமல், மூன்றாவது மாடியில் உள்ள அவரது அறைக்கு ஓடோடி சென்றேன் என்னை அவர் நலம் விசாரித்தார் பின்பு  ‘சிக்கன் கறி மற்றும் சாதம் கிடைக்குமா? எனக்கு தொண்டை வலியாக இருப்பதால் கொஞ்சம் காரமான பூண்டு ரசமும் கிடைக்குமா?’ என்று தமிழிலேயே கேட்டார்.

சுமார் 20 நிமிடங்களில், செட்டிநாடு சிக்கன், பாசுமதி சாதம், பப்படம் மற்றும் பூண்டு ரசத்தை அவரது அறைக்குக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்தேன். மறுநாள் காலையில் ஜிம்மிற்குச் செல்லும் வழியில் என்னைப் பார்த்த அவர் `இரவு உணவு நன்றாக இருந்தது’ என்று சொன்னார் அதற்கு உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய காத்திருக்கிறேன் அவர் தோனியிடம் கூறினாராம்.

தோனி மற்றும் செஃப் இடையே நடந்தேறியே இந்த அழகான உரையாடல்களை தோனியின் ரசிகர்கள் ரசித்துக்கொண்டிருக்கின்றனர்.

Latest news