வியாபாரத்தில் மட்டுந்தான் சலுகை உண்டா? வாழ்க்கையில் கிடையாதா
என்று கேட்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.
அப்படியென்ன அதிசய சலுகை……
கோபத்தை வாங்கினால் இரத்தக் கொதிப்பு இலவசம்
பொறாமையை வாங்கினால் தலைவலி இலவசம்
வெறுப்பை வாங்கினால் பகை இலவசம்
கவலையை வாங்கினால் கண்ணீர் இலவசம்
ஆனால்……
நம்பிக்கையை வாங்கினால் நண்பர்கள் இலவசம்
உடற்பயிற்சியை வாங்கினால் ஆரோக்கியம் இலவசம்
அமைதியை வாங்கினால் ஆனந்தம் இலவசம்
நேர்மையை வாங்கினால் நித்திரை இலவசம்
அன்பை வாங்கினால் அனைத்து நன்மைகளும் இலவசம்
உங்களுக்கு என்ன வேண்டுமென இன்றே இப்போதே முடிவுசெய்யுங்கள்….
இலவச சலுகையை இன்றே பெறுவீர்…..சலுகை வாழ்நாள் முழுவதும்
உண்டு.
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்….சராசரியாக இந்தியர்கள்
70 ஆண்டுகள்தான் வாழ்கின்றனர். இவ்வளவு குறுகிய காலத்தில் அன்பைப்
பொழிந்து நிம்மதியாக ஆனந்த வாழ்வு வாழ்வோமே….