சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் பிரதான சாலையில் சுந்தர்ராஜபுரம் பகுதியில் பட்டாசு கடை வைத்திருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் தனது கடையில் ஏற்கனவே பல்வேறு சலுகைகளுடன், தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு பட்டாசு வியாபாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில் காலையில் பட்டாசுக் கடையை திறந்தவுடன் பட்டாசு வாங்க வருபவர்களுக்கு மதிய உணவாக இவரது குடும்பத்தினரே அசைவ உணவை சமைத்து அன்றாடம் மதிய வேளையில் மட்டும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
இந்த நடைமுறை வரும் காலங்களிலும் தொடர்ந்து, எதிர்காலங்களிலும் வாடிக்கையாளர்களுக்கான ஆஃபர் விலை பட்டாசு வழங்குவதோடு மட்டுமின்றி, பல்வேறு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படுமென பட்டாசு வியாபாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.