சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்வர் சிரஞ்சீவி தாமோதரன். இவர் அண்ணா சாலையில் எலக்ட்ரானிக் உபகரணங்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார்.
இந்தநிலையில், சிரஞ்சீவி தாமோதரன் கடன் தொல்லையில் சிக்கி தவித்ததாகவும், இதனால் மனஉளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இவர் தனது மனைவி ரேவதி மற்றும் மகன்கள் ரித்விக் ஹர்ஷத், திக்சித் ஹர்ஷத் ஆகியோரை பாலிதீன் கவரால் முகத்தை மூடி கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நீலாங்கரை போலீசார், நான்கு பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த வீட்டில் கிடைத்த கடிதத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
