குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் போரிசனா கிராமத்தை சேர்ந்தவர் தீரஜ் ரபாரி. திருமணமான இவருக்கு ஜான்வி, ஜியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், தீராஜ் ரபாரி நேற்று முன் மாலை தனது மகள்களை காரில் அழைத்து சென்றுள்ளார்.
நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால், குடும்பத்தினர் சந்தேகம் கொண்டு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, தீராஜ் தனது நண்பருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பி, மகள்களுடன் நர்மதா கால்வாயில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது. அதன்பின், போலீசார் தீராஜ் மற்றும் அவரது இரண்டு மகள்களின் சடலங்களை மீட்டனர். சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
