Thursday, July 31, 2025

பீகாரில் தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா சுட்டுக்கொலை

பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில், பிரபல தொழிலதிபரும், பாஜக முக்கிய பிரமுகருமான கோபால் கெம்கா நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கோபால் கெம்கா, பன்கிபூர் கிளப்பில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து கோபால் கெம்காவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News