Friday, February 13, 2026

சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படாது..!

பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து வரும் 24ம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வரும் 24ம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ராயபுரம், தீவுத்திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News