என்னதான் கடமையே கண்ணாக நீங்கள் பணியாற்றினாலும், எங்கிருந்தோ ஒரு பிரச்சினை, ஏதோ ஒரு ரூபத்தில் உங்களை தேடி வரும் என்பதற்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இருவேறு சம்பவங்களே சாட்சியாக அமைந்துள்ளன.
பேருந்துகளில் எடுத்துச் செல்லப்படும் கோழி, ஆட்டுக்குட்டி போன்றவற்றுக்கு நடத்துநர்கள் டிக்கெட் வழங்கும் நிகழ்வுகள் ஒன்றிரண்டை நாம் பார்த்திருப்போம் அல்லது கேள்வி பட்டிருப்போம்.
ஆனால், கர்நாடக மாநிலத்தில் இருவேறு இடங்களில் பேருந்தில் எடுத்து வரப்பட்ட பலா பழம் மற்றும் கேஸ் ஸ்டவ் போன்றவற்றுக்கு,
லக்கேஜ் டிக்கெட் ஏன் வழங்கவில்லை என விளக்கம் கேட்டு இரண்டு நடத்துநர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராய்ச்சூரில் கேஸ் ஸ்டவ்வுடன் பெண் ஒருவர், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் ஏறினார்.
அந்த அடுப்பு சுமார் அரை கிலோ மட்டுமே எடை இருக்கும். அதற்கு அவர் லக்கேஜ் டிக்கெட் வாங்கவில்லை.
இந்நிலையில், பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ஒருவர், அந்தப் பெண் தனக்கான டிக்கெட் மட்டுமே வைத்துள்ளார் என்பதையும்,
கேஸ் ஸ்டவ்வுக்கும் பலா பழத்துக்கு என் லக்கேஜ் டிக்கெட் பெறவில்லை என்பதையும் கண்டறிந்தார்.
நடத்துநர் கோரக்நாத் தனது கடமையைச் செய்ய தவறி விட்டதாகக் கூறிய அந்தப் பரிசோதகர்,
அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டார்.
இந்த செய்தி தற்போது பேசும்பொருளாகி உள்ளது.