“பாஜக அரசின் திட்டங்களை காப்பியடித்த பட்ஜெட்” – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்

தமிழக பட்ஜெட் முழுவதும் பாஜக அரசின் திட்டங்களை காப்பியடித்த பட்ஜெட் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னை திருவேற்காட்டில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டாஸ்மாக் ஊழல் பத்து ரூபாயில் ஆரம்பித்து இன்று ஆயிரம் கோடியை தாண்டி ஒரு லட்சம் கோடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக பட்ஜெட் முழுவதும் காப்பி அடிக்கப்பட்ட பட்ஜெட் என்றும், 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போவது மணல் கொள்ளையும், மதுபான கொள்ளையும்தான் எனவும் விமர்சித்துள்ளார்.

Latest news