ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது.
பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை மத்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இது நிறுவனத்தின் சந்தைப் பங்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடவும் உதவும் என சொல்லப்படுகிறது. BSNL நிறுவனம் முதலில் 5G சேவைகளை டெல்லியில் தொடங்கும் என்றும் அதன் பிறகு இது நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது.