Monday, March 31, 2025

குறைந்த விலையில் சூப்பர் பிளான் : BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்

கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியதன் காரணமாக, அடுத்தடுத்த மாதங்களில் பிஎஸ்என்எல் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒரு நல்ல காலம் ஆரம்பித்தது. தற்போது வரை இந்த வளர்ச்சி தொடர்ந்துவருகிறது.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி இணைய சேவையை வழங்கி வரும் நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை நாடு முழுவதும் பரவலாக்கி வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான் ஒன்றை 180 நாள்கள் வேலிடிட்டியுடன் அறிமுகப்படுத்தி உள்ளது.

ரூ.897 விலையில் 180 நாள்களுக்கு வழங்கப்படும் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் உங்களுக்கு மொத்தம் 90 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா நிறைவடைந்துவிட்டால் இணைய வேகம் 40Kbps அளவிற்கு குறையும். தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். லோக்கல் மற்றும் எஸ்டிடீ கால்கள், எந்த நெட்வோர்க்கிற்கு வேண்டுமானாலும் வரம்பற்ற வகையில் பேசிக்கொள்ளலாம்.

Latest news