ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் இன்று (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்கு விஜய் வருகை தந்துள்ளார். அவருக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது தொண்டர் ஒருவர் லைட் கம்பத்தின் மீது ஏறி நின்றுள்ளார். இதை கவனித்த விஜய், “தம்பி கீழே இறங்குப்பா, நீ கீழே இறங்குனாதான் முத்தம் தருவேன், என கூறி சிறிது நேரம் பேச்சை நிறுத்திய விஜய் மீண்டும் பேச்சை துவங்கினார்.
