Monday, January 20, 2025

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் தைரிய மனிதர்

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வரும் இளைஞரின் வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அந்த அதிர்ஷ்டக்கார மனிதர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓங் டாம் சோரூட்.

பச்சைக் குத்தும் கலைஞரான இவர், தனது முதல் மனைவியை நண்பரின் திருமணத்தில் சந்தித்துள்ளார்.

இரண்டாம் மனைவியை ஒரு மார்க்கெட்டில் சந்தித்துள்ளார். முதல் மனைவி இருப்பது இரண்டாவது மனைவிக்குத் தெரியாதாம்..

மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து, ஆறாவது மனைவிகளை சமூக வலைத்தளங்கள் மூலமும் கண்டுகொண்டார்.

7 ஆவது மனைவியைத் தனது தாயுடன் கோவிலுக்குச் செல்லும்போது சந்தித்துள்ளார்.

8 ஆவதுதான் விநோதம்…

7 மனைவிகளோடு விடுமுறையைக் கழிக்கச்சென்ற இடத்தில் சந்தித்துள்ளார். 8 ஆவது மனைவியும் பார்த்தவுடனே திருமணத்துக்கு சம்மதித்துவிட்டாராம்.

8 மனைவிகளையும் முதல் பார்வையிலேயே வசீகரம்செய்து, காதலித்துத் திருமணம் செய்துள்ளார்.

இதில என்ன ஆச்சரியம் என்றால்,

8 மனைவிகளும் ஒரே வீட்டில்தான் வசிக்கிறார்களாம்… அவங்களுக்குள் ஒருமுறைகூட சண்டை வந்ததே இல்லையாம்…அதுக்குக் காரணம் அத்தனை மனைவிகளிடமும் பாரபட்சமின்றிப் பாசமழை பொழிவாராம்…

சரி எதற்காக ஒரே நபரை இத்தனைபேரும் திருமணம் செய்துகொண்டீர்கள் என்று கேட்டால், சோரூட் தங்கமான மனுஷன்….அவரைப் பார்த்தவுடனே காதல் வந்துடுச்சு என்று கோரஸ் பாடுகிறார்கள் 8 பேரும்.

கொடுத்து வச்ச மனுஷன் என்கிறார்கள் 90ஸ் கிட்ஸ்-

ம்ம்ம்….வரிசையா போய்க்கிட்டு இருக்கு டாம்….போதும் போதும் பூராத்தையும் இத்தோடு நிறுத்திக்கோங்க சோரூட்….உங்க ரூட் ரொம்ப ராங் ரூட்டா இருக்கு…

ஐயோ பாவம் 90ஸ் கிட்ஸ்.

Latest news