Wednesday, December 24, 2025

காதலி திட்டியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, காதலி திட்டிய விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கறம்பக்குடி அடுத்த பாப்பன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ் குமார். 27 வயதான இவர், பெண் ஒருவரை கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். சம்பவத்தன்று காதலியுடன் செல்போனில் பேசும் போது ஏற்பட்ட தகராறில், காதலி திட்டியதால் மனோஜ்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கறம்பக்குடி தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள கருவை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவமறிந்து வந்த போலீசார், இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News