Tuesday, April 29, 2025

ஹெலிகாப்டர் பறக்கவில்லை… பொம்மை ஹெலிகாப்டர் மீது புகார் அளித்த சிறுவன்

பொம்மை ஹெலிகாப்டர் பறக்கவில்லை என சிறுவன் காவல்நிலையத்தில் புகாரளித்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் காங்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில், வினய் ரெட்டி என்ற 10 வயது சிறுவன் 300 ரூபாய்க்கு பொம்மை ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார். அது பறக்காததால் கோபமடைந்த சிறுவன், நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்று கடை உரிமையாளர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்தான். இதனையடுத்து சிறுவனின் தாத்தாவை வரவழைத்து போலீசார் அவருடன் சிறுவனை பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

Latest news