கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமான சிறுவன்- அதிர்ச்சியில்  நெட்டிசன்கள்

44
Advertisement

கண்காட்சி மைதானத்தில் சவாரி செய்து கொண்டிருந்த சிறுவன் திடீரென மாயமான  சம்பவம் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலேசியாவின் ஜோகூரில் உள்ள ஒரு கண்காட்சி மைதானத்திற்கு ஒரு தம்பதி   தன் ஐந்து வயது மகனை அழைத்துசென்றுள்ளனர்.

அங்குள்ள குழந்தைகளுக்கான சவாரிகளில் அவர்களது 5 வயது மகனை  விளையாடவைத்து மகிழ்ந்துள்ளனர்.ஒருகட்டத்தில் வட்டமிடும் சவாரி ஒன்றில் அந்த குழந்தையை சவாரிக்கு உட்கார வைத்தனர்.இருவர் அமரும் பெட்டியில் சிறுவனுடன் அடையாளம் தெரியாத மற்றொரு சிறுவன் அமர்ந்தான்.

சவாரியும் தொடங்கியது,முதல் ரவுண்டு முடிந்த இரண்டாம் ரவுண்டு வரும்போது அவர்களின் மகன் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சிறுவன் மாயமாகி போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் அந்த தம்பதி.கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவன் மாயமானது அவர்களின் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது.இதை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் அவர்.இந்த வீடியோ தற்போது அந்நாட்டில் வைரலாகி வருகிறது.

Advertisement