ஈரானுக்கு எதிரான போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என்று சொல்லி, அந்நாட்டின் மீது தொடர்ச்சியாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதுடன், அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதன் காரணமாக உலக நாடுகள் மீண்டும் கடுமையான கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினை சந்திக்கலாம் என்று தெரிகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல், அமெரிக்காவின் இரட்டை நாடகத்தை பாகிஸ்தான் நாடு தோலுரித்துக் காட்டியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு ஆதரவாக, ” போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை,” என்று பேசினார். அவர் பேசிய 10 நிமிடங்களுக்குள் பாகிஸ்தான் இதற்கு பதில் அளித்தது. இதுகுறித்து பாகிஸ்தான், ”அமெரிக்கா மற்றும் ஈரானின் போர் நிறுத்தத்தில் லெபனான் நாடும் சேர்க்கப்பட்டது.
இந்த விஷயத்தில் இஸ்ரேலும், அமெரிக்காவும் உலகத்திடம் பொய் சொல்கின்றன,” என இரு நாடுகளின் முகத்திரையையும் கிழித்தெறிந்துள்ளது. தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், வல்லரசு நாடுகள் என்றும் பாராமல் துணிச்சலாக இந்த விஷயத்தில் உண்மையை சொல்லி இருக்கிறது. இதனால் ஈரான் உடனான சமாதான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா பாகிஸ்தானைக் கூப்பிட, இனி வாய்ப்புகள் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
