தன் நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ரோபோ ஷங்கர் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 18ம் தேதி காலமானார். ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தில் ப்ரியங்கா டான்ஸ் ஆடிய வீடியோ வைரலானது. இதனை பலரும் விமர்சனம் செய்தனர்.
அதே நேரத்தில் கணவரை இழந்த சோகத்தில் செய்வது அறியாமல் ப்ரியங்கா டான்ஸ் ஆடியதை போய் இந்த அளவுக்கு பெரிதுபடுத்தலாமா என்று ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். இந்நிலையில் கணவரின் இறுதி ஊர்வலத்தில் ப்ரியங்கா ஆடியதற்கான காரணத்தை நடிகர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
ரோபோ ஷங்கர், ப்ரியங்கா எப்பொழுதுமே ஜாலியாக டான்ஸ் ஆடிக் கொண்டே இருந்தவர்கள். அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக, அன்பு மொழியாக இருந்தது டான்ஸ் என்றார்கள் ரசிகர்கள். அதை தான் போஸ் வெங்கட்டும் சொல்லியிருக்கிறார்.
நான் பொதுவாக டான்ஸ் ஆட மாட்டேன். ஆனால் ஷங்கர் என் அருகில் இருந்தால் என்னையும் டான்ஸ் ஆட வைத்துவிடுவார். நடனம் என்பது எங்களுக்கு ஒரு மொழியாக இருந்தது. அந்த மொழி மூலம் பேசிக்கிட்டோம். ரோபோ ஷங்கர், ப்ரியங்கா வாழ்க்கையில் இருந்து நடனத்தை தனியாக பிரிக்க முடியாது. அதனால் தான் அவர் டான்ஸ் ஆடியிருக்கிறார். அதை யாரும் தவறாக பேச வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.